Showing posts from October, 2006

அண்ணன் திலீபனும் அவனது போரும்

சோத்துக்கு சாகவில்லை சோறின்றி சாகவில்லை சுதந்திரம் வேண்டி நின்றாய் சூரியனே என் திலீபா ! பத்தோடு பதினொன்றல்ல -சாவு இத்தோடு முடிந்தது என்றெழுந்த கதிரவனே என்னுயிரேஎன் திலீபா! கொடுத்து பெறுவதில…

முற்றும் துறந்தபின்

தொழிலாளர் முன்னேற்றத்தை சிறப்பாக பிரசங்கித்த சாமியார் போனஸ் பேச்சின்போது உடனிருக்க மறுத்துவிட்டார் ! -தியாகு

முதலாளி

பிடிச்சா இருங்க என்பதை தவிரவேறு பதில் இல்லை எனது பல கேள்விகளுக்கு அவரிடம்! -தியாகு

வியாபாரமும் அதன் நிமித்தமும்

செக்கிழுத்த செம்மலும் சிறைசென்ற தியாகிகளும் மக்களுக்குஎன உழைத்த மாண்புமிகு தலைவர்களும் விட்டு சென்ற ஓட்டை வீடு மட்டும் மிச்சமுங்க கோக்கின்னும் பெப்சின்னும் குளிர்பாணம் கொண்டுவரான் காளிமார்க…

வல்லமை

இறக்கை அசக்காமல் பறக்கும் அந்த பருந்துகள்என்னை கவர்வதில்லை இறக்கை இல்லாத கோழிக்குஞ்சை அது தூக்கிய நாளுக்கு பின் ! -தியாகு

பணம் மட்டுமா?

எல்லா கடன்களையும் என்னையே அடைக்கச்சொல்லும் அம்மாவுடன் சண்டைபோட்டு கோபத்துடன் வந்தான் வெளியே "சாப்பிட்டு போடா"என்கிறாள் வாசலில் நின்று ! -தியாகு

முழு நிறைவானதல்ல

ஒரு வேளை உணவுக்கும் இல்லாத மக்களுடன் வாழ்ந்தேனேஎனும் வருத்தத்துடன் சாகபோகும் என் வாழ்க்கை ! -தியாகு

Load More
That is All