சங்கர் குஹா நியோகியை எடைபோடும் மக இகவின் குறைபட்ட பார்வை என்ன ?

சில விசயங்களை மேலோட்டமாக படிப்பதாலேயே ஒரு அமைப்பின் உள்நோக்கத்தை அது சொல்ல வரும் சேதியை புரிந்து கொள்ளமுடியாது. அந்த அமைப்பு புரிய கூடாது என்ற நோக்கத்தில் கருத்தை சொல்லவேண்டும் என்ற கட்டாயத்துக்கு வரும் போது அது சொல்லும் கருத்துக்களில் சில எப்படி இருந்தாலும் அந்த அமைப்புகளின் உள்நோக்கத்தை பட்டவர்த்தனமாக காட்டிவிடுகின்றன

வினவு சங்கர் குஹா நியோகி: மண்ணையும் மக்களையும் நேசித்த தலைவன்! http://www.vinavu.com/2011/11/28/shankar-guha-niyogi/என்ற பதிவை படித்த போது மேலோட்டமாக நியோகியை புகழ்வதுபோல் தான் இருந்தது. ஆனால் சில இடங்களில் நாசூக்கா நியோகியின் மீது சில விமர்சனங்களை வைப்பது ஏன் என்று எனக்குப் புரியாமலயே இருந்தது.

நியோகியின் மீது வினவு வைக்கும் விமர்சனம் 1:

//அவர் நம்பிக்கை வைத்த சட்டங்களும் அரசு அமைப்பும் அவரது உயிரை பாதுகாக்க முடியவில்லை. அவரை கொலை செய்ய சதி செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கக் கூட நீதி அமைப்பால் முடியவில்லை.//

அதாவது நியோகி இந்த சட்டங்கள் மீதும் அரசு அமைப்பு மீதும் நம்பிக்கை வைத்தார் என்பது நியோகியின் மீது வினவு வைக்கும் ஒரு விமர்சனம்.

நியோகியின் மீது வினவு வைக்கும் விமர்சனம் 2:
Link
//மண்ணையும், மக்களையும்,தொழிலாளர்களையும் நேசித்து, சமரசமின்றி போராடிய சங்கர்குஹா நியோகியின் கொலையும்,நீர்த்துப் போன வழக்கும்தொழிலாளர்கள் புரட்சிகர அமைப்புகளில் சேரவேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.//
அதாவது புரட்சிகர அமைப்பில் இருந்து நியோகி செயல்பட வில்லை என்பது நியோகியின் மீது வினவு வைக்கும் இரண்டாவது விமர்சனம்.

வினவு ஏன் நியோகியை இப்படி விமர்சிக்கிறார்கள் என்று எனக்குப் புரியாமலேயே இருந்தது. மாற்றுக்கருத்து இதழில் தோழர் சங்கர் குஹா அவர்களின் ரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு . என்ற கட்டுரையை படித்த பின் எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

இதில சங்கர் குஹா நியோகியின் கொலையும் நீர்த்து போனவழக்கும் என்பதில் என்ன சொல்கிறார்கள் என்றால் நியோகி புரட்சிகர அமைப்பில் இருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார் என்றோ அல்லது அப்படியே கொல்லப்பட்டிருந்தாலும் வழக்கு நீர்த்து போயிருக்காது என்றோதான்.

அவரது மரணம் நிகழ்திருக்காது அல்லது மரணம் நிகழ்ந்தாலும் தொடர்ச்சியா போராடி நீதி வாங்கியிருப்பர் அல்லது பலிக்கு பலி வாங்கி இருப்பார்கள் புரட்சிகர இயக்கங்கள் என்பதை சொல்லாமல் சொல்கின்றன இந்த வாக்கியம்.

அதென்ன தொழிலாளர்கள் தொழிற்சங்களில் சேராமல் புரட்சிகர அமைப்புகளில் சேர சொல்லும் அடுத்த வரி என்று பார்த்தால் நியோகி மண்ணையும் மக்களையும் நேசித்ததோடு அல்லாமல் மண்ணின் முரண்பாட்டையும் அறிந்து கொண்டார் அதனால்தான் சமரசமின்றி போராட முடிந்தது. இத்தகைய சமரசமற்ற போராட்டத்தின் பரிசாக மரணம் வாய்க்கும் என்றால் அந்த மரணத்தை தவிர்ப்பதற்காக ஒரு மாற்று வழிமுறையை பற்றி வேறு பாதுகாப்பான இயக்கத்தை பற்றி ஒரு கம்யூனிஸ்டு சிந்திக்க மாட்டான் தனது போராட்டத்தின் பலனாக தனது உயிர் போய்விடுமோ என அஞ்சுகிறவன் என்றைக்கும் மக்களுக்காக போராட வரமாட்டான்.

நியோகிக்கும் எம் எல் அமைப்புகளுக்கும் உள்ள பெருத்தவேறுபாடு என்ன ?
நியோகி மலைவாழ்மக்களை கூலி தொழிலாளர்களாக பார்த்தார்(அவர்களின் வாழ்நிலை அது) ஆனால் இவர்களோ அவர்களைமலைவாழ் மக்களாகவே பார்ப்பதும் அவர்கள் கூலிக்காக சுரண்டப்படும்போது சங்கமாக சேர்த்து போராட சொல்லாமல் அப்படியே காட்டுக்குள் வைத்திருக்க சொல்லும் முடிச்சு விழுந்தசிந்தனை இது

அதென்ன முடிச்சுன்னு கேட்டீங்கன்னா இந்தியாவில் நிலபிரபுத்துவ முரண்பாடு பிரதானமானதுன்னு இவங்க கட்சி திட்டம் சொல்லுது. ஆனால் நிலமையோ முதலாளித்துவ முரண்பாடேநிலவுதுன்னு சொல்லுது அதை சரியா பார்க்க முடிஞ்சவர் நியோகிஅவரது பார்வையை குறைசொல்லமுடியாது ஏன்னா அவர் ஆயிரக்கணக்காக மக்களை திரட்டிவிட்டார்.

அவரது வழிமுறையை குறை சொல்ல முடியாது ஏன்னா அவரது வழிமுறையில் நிறையவெற்றிகளை பெற்று விட்டார்

இப்போது அவரது இறப்பை குறை சொல்கிறார்கள் இதன் மூலம் இறந்து போன இவர்களது தத்துவ வறுமையை மறைக்கிறார்கள். நியோகிக்கு இல்லை சாவு. ஏனெனில் அவரது வழிமுறை இன்னும் உயிர்போடு இருக்கிறது. ஆனால் நிகழ்காலத்தில் வாழ்ந்துகொண்டே இறந்துபோனமூளையுடன் செயல்படும் இவர்களோ சொல்கிறார்கள் புரட்சிகர இயகத்தில் சேரவேண்டும் என்று. ஏனெனில் கொலையும் , வழக்கு நீத்து போவதும் நிகழாதுன்னு வாக்குறுதிகொடுக்கிறார்கள்

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post